கருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கருகு1கருகு2

கருகு1

வினைச்சொல்கருக, கருகி

 • 1

  (தீயில்) எரிந்து அல்லது சூடேறிக் கறுப்பு நிறம் அடைதல்.

  ‘அந்தத் தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் கருகிச் செத்தார்கள்’
  ‘வறுக்கும்போது பல கடலைகள் கருகிப்போய்விட்டன’

 • 2

  (தாவரத்தின் இலை, தளிர் முதலியவை வெப்பத்தால் அல்லது நோயால்) காய்தல்; வாடுதல்.

  ‘நோய் பாதித்த நெற்பயிரின் நுனி கருகிப்போயிருந்தது’
  உரு வழக்கு ‘காதல் வளரட்டும், கருக வேண்டாம்’

கருகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கருகு1கருகு2

கருகு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ரொட்டியின் மேற்பகுதி, அப்பத்தின் ஓரப் பகுதி போன்றவற்றில்) ஏடுபோல் மெல்லியதாகக் காணப்படும் பழுப்பு நிறப்பகுதி.

  ‘பாண் கருகு மொரமொரவென்று இருக்கின்றது’
  ‘அப்பக் கருகைப் பிள்ளைக்குக் கொடு’