தமிழ் கற்பி யின் அர்த்தம்

கற்பி

வினைச்சொல்கற்பிக்க, கற்பித்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கற்றுக்கொடுத்தல்; சொல்லித்தருதல்.

  ‘என் ஆசிரியர் வாழ்நாள் முழுதும் கற்பதும் கற்பிப்பதுமாகவே இருந்தார்’

தமிழ் கற்பி யின் அர்த்தம்

கற்பி

வினைச்சொல்கற்பிக்க, கற்பித்து

 • 1

  கற்பனையாக உருவாக்குதல்; புனைதல்.

  ‘இது நீயாகக் கற்பித்துச் சொல்வது; நான் நம்ப மாட்டேன்’
  ‘நூலை விமர்சிக்கும்போது ஒரு வாசகனைக் கற்பித்துக்கொண்டு எழுதுகிறோம்’

 • 2

  (நியாயம், உள்நோக்கம் முதலியவற்றை) உண்டாக்கிக் காட்டுதல்; கண்டுபிடித்தல்.

  ‘நீ செய்தது தவறு, நியாயம் கற்பிக்க முயலாதே!’
  ‘அவர் சாதாரணமாகச் சொன்னதற்கு ஏன் உள்நோக்கம் கற்பிக்கிறீர்கள்?’

 • 3

  (ஒருவருடைய நற்பெயருக்குக் களங்கம், ஆட்சிக்கு அவப்பெயர்) ஏற்படுத்துதல்.

  ‘எதிர்க்கட்சியினர் எங்கள் தலைவரின் அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்குக் களங்கம் கற்பிக்கிறார்கள்’