தமிழ் கறவை யின் அர்த்தம்

கறவை

பெயர்ச்சொல்

 • 1

  பால் தரும் மாடு.

  ‘அவர் வீட்டில் கறவைக்குப் பஞ்சம் இல்லை; எப்போது போனாலும் பால் கிடைக்கும்’
  ‘வெளிநாடுகளிலிருந்து கறவை இனங்கள் இறக்குமதி செய்யப்படும்’

 • 2

  (பசு, எருமை ஆகியவை) ஒரு வேளைக்குக் கறக்கிற அளவு.

  ‘இந்தப் பசு ஒரு கறவைக்கு ஐந்து படி பால் கொடுக்கிறது’