தமிழ் கறிகூட்டு யின் அர்த்தம்

கறிகூட்டு

வினைச்சொல்-கூட்ட, -கூட்டி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (சமையலில் குறிப்பிட்ட உணவுப் பண்டத்தைச் சமைக்கத் தொடங்குவதற்கு முன்) முன்னேற்பாடாகச் செய்துவைத்துக்கொள்ளும் வேலை.

    ‘கறிகூட்டிவிட்டால் தூக்கி அடுப்பில் வை’
    ‘இப்போதுதான் கறிகூட்டி வைத்துள்ளேன். கொதித்தவுடன் சாப்பிடலாம்’