தமிழ் கலக்கு யின் அர்த்தம்

கலக்கு

வினைச்சொல்கலக்க, கலக்கி

 • 1

  (ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டுக் கரண்டி, குச்சி போன்றவற்றால்) கிண்டுவதைப் போல் சுழற்றுதல்; (தெளிந்த நீர் முதலியவற்றை) கலங்கச் செய்தல்.

  ‘தொட்டியில் இருந்த கழுநீரைக் கலக்கிவிட்டு மாடுகளைக் குடிக்கச் செய்தான்’
  ‘எருமைகள் குட்டையில் இறங்கி நீரைக் கலக்கிவிட்டன’

 • 2

  (வயிற்றை) புரட்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்துதல்.

  ‘தண்ணீர் நிறையக் குடித்ததால் வயிற்றைக் கலக்குகிறது’

 • 3

  (என்ன நடக்கப்போகிறதோ என்ற எண்ணத்தால் உண்டாகும் பயம்) தொல்லைப்படுத்துதல்.

  ‘மனத்தைக் கலக்கும் செய்தி இது’

 • 4

  (பொதுமக்களை) பரபரப்படையச் செய்தல்.

  ‘தமிழகத்தையே கலக்கிக்கொண்டிருந்த கொள்ளைக் கூட்டம் பிடிபட்டுவிட்டது’
  ‘இவர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட் உலகையே கலக்கிய வீரர்’