தமிழ் கலகல யின் அர்த்தம்

கலகல

வினைச்சொல்கலகலக்க, கலகலத்து

 • 1

  (ஒன்றாக இருக்கும் சிறு பொருள்கள் ஒன்றோடொன்று) மோதி அல்லது உருண்டு ஒலி உண்டாக்குதல்.

  ‘பாத்திரம் கழுவும்போது அவள் போட்டிருந்த கண்ணாடி வளையல்கள் கலகலத்தன’

 • 2

  (செயல்களாலும் போக்குவரத்தாலும் ஓர் இடம்) ஓசையோடு இருத்தல்.

  ‘காலை ஏழு மணிக்கே ஊர் கலகலக்க ஆரம்பித்துவிட்டது’
  ‘அவளுடைய சிரிப்பால் வீடே கலகலத்தது’

 • 3

  (நாடகம், திரைப்படம் போன்றவற்றின் சில தன்மைகளால் அவையோரிடையே) உற்சாகம் மிகுதல்.

  ‘நாடகத்தின் நகைச்சுவைக் காட்சிகளில் அரங்கமே கலகலத்தது’
  ‘அரங்கமே கலகலக்கும் வண்ணம் முழுக் காத்திரத்துடன் கிட்டப்பா கர்நாடக இசை ராகங்களை ஆண்டார்’

 • 4

  (ஒரு அமைப்பு) ஒற்றுமை, கட்டமைப்பு போன்றவை குலைந்து ஆட்டம் காணுதல்.

  ‘அதிருப்தியாளர்களின் எதிர்ப்பினால் கட்சி கலகலத்துவிட்டது’
  ‘தமிழ்நாடு அணியின் ஆட்டத்தினால் கர்நாடக அணி கலகலத்துவிட்டது’
  உரு வழக்கு ‘நேர்மையில் அவர் வைத்திருந்த நம்பிக்கை கலகலத்துவிட்டது’