தமிழ் கலந்துரையாடு யின் அர்த்தம்

கலந்துரையாடு

வினைச்சொல்-உரையாட, -உரையாடி

  • 1

    (ஓர் இடத்தில் கூடி, ஏதேனும் ஒரு பொருள் பற்றி) கருத்துப் பரிமாறிக்கொள்ளுதல்.

    ‘பிரபல நாட்டியக் கலைஞருடன் கலந்துரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது’
    ‘உலகில் தட்பவெப்பம் மாறிவருவதைக் குறித்து ஆராய்ச்சியாளருடன் அவர் கலந்துரையாடினார்’