தமிழ் கல்லைத் தூக்கிப் போடு யின் அர்த்தம்

கல்லைத் தூக்கிப் போடு

வினைச்சொல்போட, போட்டு

  • 1

    (ஒருவருடைய உறுதி குலைந்துபோகும்படி) அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றைச் சொல்லுதல் அல்லது செய்தல்; குண்டைத் தூக்கிப்போடுதல்.

    ‘கல்யாண வேலைகளை ஆரம்பித்துவிட்டேன். இப்போது வந்து மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாளே’
    ‘கிளம்பும்போது கையில் போதுமான பணம் இருக்கிறது என்று சொன்னாய். நகை வாங்கிய பிறகு அவ்வளவு பணம் இல்லை என்று கல்லைத் தூக்கிப் போடுகிறாயே’