தமிழ் கல்லை விட்டெறிந்து பார் யின் அர்த்தம்

கல்லை விட்டெறிந்து பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

  • 1

    (ஒரு செயலின் பலன் சாதகமாக அமையுமா அமையாதா என்று உறுதியாகத் தெரியாத நிலையில்) முயற்சி செய்து பார்த்தல்.

    ‘விண்ணப்பம் அனுப்ப வேண்டுமா என்று யோசித்துக்கொண்டே இருக்காதே. கல்லை விட்டெறிந்து பார்’
    ‘அவர் உதவி செய்வாரா என்று எனக்குத் தெரியாது. சும்மா கல்லை விட்டெறிந்து பார்த்தேன், பலித்துவிட்டது’