தமிழ் கலவரம் யின் அர்த்தம்

கலவரம்

பெயர்ச்சொல்

 • 1

  கலகம்; கிளர்ச்சி.

  ‘உள்நாட்டுக் கலவரத்தை அடக்க ராணுவம் வந்தது’

 • 2

  (பயம் கலந்த மன) குழப்பம் அல்லது அதிர்ச்சி.

  ‘பெரியவர் கேட்ட கேள்வி அவன் மனத்தில் சிறிது கலவரத்தை உண்டாக்கியது’
  ‘விபத்துக்கு உள்ளான மனைவிக்கு என்ன ஆயிற்றோ என்ற கலவரத்துடன் அவன் மருத்துவமனையை நெருங்கினான்’