தமிழ் களஞ்சியம் யின் அர்த்தம்

களஞ்சியம்

பெயர்ச்சொல்

 • 1

  (தானியத்தை) கொட்டி வைப்பதற்கான இடம் அல்லது பெட்டி போன்ற அமைப்பு.

  ‘பத்து மூட்டை நெல்லைக் களஞ்சியத்தில் கொட்ட வேண்டும்’
  உரு வழக்கு ‘கல்விக் களஞ்சியம்’
  உரு வழக்கு ‘அபத்தக் களஞ்சியம்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு சாமான்கள் வைக்கும் இடம்.

  ‘அந்த வீட்டில் சாமியறை, களஞ்சிய அறை, படுக்கையறை எனப் பல அறைகள் இருந்தன’