கீழ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீழ1கீழ்2கீழ்3கீழ்4கீழ்5

கீழ1

பெயரடை

 • 1

  கிழக்கு என்பதன் பெயரடை வடிவம்.

  ‘கீழ வீதி’
  ‘கீழத் தெரு’

கீழ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீழ1கீழ்2கீழ்3கீழ்4கீழ்5

கீழ்2

பெயர்ச்சொல்

 • 1

  கிழக்கு.

  ‘கீழ்த்திசை நாடுகள்’
  ‘கீழ்ப்பக்கம்’
  ‘கீழ்ப்புறம்’

கீழ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீழ1கீழ்2கீழ்3கீழ்4கீழ்5

கீழ்3

பெயர்ச்சொல்

 • 1

  தாழ்ந்த நிலை; தரக் குறைவு; மோசம்.

  ‘அந்தச் சர்வாதிகார நாட்டில் மக்கள் நாயினும் கீழாக வாழ்ந்துவருகிறார்கள்’
  ‘உங்களைவிட நான் மிகவும் கீழ்நிலையில் இருக்கும் ஊழியன்’

கீழ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீழ1கீழ்2கீழ்3கீழ்4கீழ்5

கீழ்4

பெயர்ச்சொல்

 • 1

  (மேல்பகுதிக்கு அல்லது மேல் நிலைக்கு மாறான) அடிப்பகுதி.

  ‘கீழ் இமையில் மை தீட்டினாள்’

 • 2

  (ஓர் அளவின்) குறைந்த பகுதி.

  ‘இந்தப் போட்டியில் கலந்துகொள்பவர்களுக்குக் கீழ் எல்லையாக இருபது வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது’

கீழ -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கீழ1கீழ்2கீழ்3கீழ்4கீழ்5

கீழ்5

இடைச்சொல்

 • 1

  (‘கு’, ‘இன்’ ஆகிய உருபுகளைச் சார்ந்து வரும்போது) ‘அடியில்’ என்ற பொருளில் வரும் இடைச்சொல்.

  ‘மேசைக்குக் கீழ் நாய் படுத்திருந்தது’
  ‘தலையணையின் கீழ் சாவி வைத்திருக்கிறேன்’

 • 2

  (‘கு’, ‘இன்’ ஆகிய உருபுகளைச் சார்ந்து வரும்போது) ‘(சட்டம் முதலியவற்றின் பிரிவுக்கு அல்லது நிர்வாகத்தின் ஆட்சிக்கு அல்லது ஒருவரின் அதிகாரத்துக்கு) உட்பட்டு’ என்ற பொருளில் வரும் இடைச்சொல்.

  ‘வாடகைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு செல்லுபடியாகாது’
  ‘இந்தப் பகுதி ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது’

 • 3

  கணிதம்
  தொகுதியைப் பகுதி வகுக்கிறது என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘எட்டின் கீழ் நான்கு என்ற கணக்குக்கு விடை என்ன?’