தமிழ் கீழ்ப்படு யின் அர்த்தம்

கீழ்ப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  உட்படுதல்; அடங்குதல்.

  ‘பத்து வயதுக்குக் கீழ்ப்பட்ட குழந்தைகள் இந்த ஓவியப் போட்டியில் கலந்துகொள்ளலாம்’
  ‘இவை ஆங்கிலேய ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்த நாடுகள்’

 • 2

  கீழ்ப்படிதல்.

  ‘கீழ்ப்பட மறுத்தால் என்ன தண்டனை தெரியுமா?’