கழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கழி1கழி2கழி3கழி4

கழி1

வினைச்சொல்கழிய, கழிந்து, கழிக்க, கழித்து

 • 1

  (காலம், வாழ்நாள்) செல்லுதல்; கடத்தல்.

  ‘உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிந்த பின் இந்த மாத்திரையைச் சாப்பிட வேண்டும்’
  ‘அவரோடு பேசிக்கொண்டிருந்ததில் பொழுது கழிந்ததே தெரியவில்லை’

 • 2

  (கடன், கடமை) தீர்தல்.

  ‘பையனைப் படிக்கவைத்துவிட்டோம். நம் கடமை கழிந்தது என்று இருக்க முடியுமா?’
  ‘கடன் வாங்கினால் கடன் கழியும்வரை வேலை செய்ய வேண்டுமே என்று கவலைப்பட்டார்’

கழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கழி1கழி2கழி3கழி4

கழி2

வினைச்சொல்கழிய, கழிந்து, கழிக்க, கழித்து

 • 1

  (பெரும்பாலும் மாட்டைக் குறிப்பிடும்போது) பேதியாதல்.

  ‘மாடு எதையோ சாப்பிட்டிருக்கிறது. அதனால்தான் இப்படிக் கழிகிறது’
  உரு வழக்கு ‘அவன் பயத்தால் கழிகிறான்’

கழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கழி1கழி2கழி3கழி4

கழி3

வினைச்சொல்கழிய, கழிந்து, கழிக்க, கழித்து

 • 1

  (காலத்தை) செலவழித்தல் அல்லது போக்குதல்.

  ‘பெற்றோரின் தயவிலேயே இன்னும் எத்தனை நாள் காலத்தைக் கழிப்பது?’
  ‘பெண்கள் தங்கள் பாதி வாழ்நாளை அடுப்படியிலேயே கழித்துவிடுவார்கள் போலும்’

 • 2

  (ஒரு தொகையிலிருந்து மற்றொரு தொகையை) பிடித்தல்; (ஓர் எண்ணிலிருந்து மற்றோர் எண்ணை) குறைத்தல்.

  ‘கடன் கொடுக்கும்போது வட்டியைக் கழித்துக்கொண்டுதான் மீதியைத் தருவார்’
  ‘ஐநூறு ரூபாய் கொடுங்கள்; என் சம்பளத்தில் கழித்துக்கொள்ளுங்கள்’
  ‘நூற்றியிருபதிலிருந்து முப்பத்தாறைக் கழி!’

 • 3

  (பொருள்களை வேண்டாததாக) ஒதுக்குதல்; (ஊழியர்களை) நீக்குதல்.

  ‘இந்த ஓட்டையுடைசல்களைக் கழித்துவிட வேண்டியதுதானே’
  ‘புதிய நிர்வாகத்தினர் நிறைய ஊழியர்களைக் கழிக்கப்பார்க்கிறார்கள்’

 • 4

  (கடனை) தீர்த்தல்; அடைத்தல்.

  ‘ஒருவழியாகக் கடனைக் கழித்து முடித்துவிட்டேன்’

 • 5

  (மரத்தின் கிளையை) வெட்டுதல்.

  ‘வேலிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த வேப்ப மரக் கிளையைக் கழித்துக்கொண்டிருந்தார் அப்பா’

கழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கழி1கழி2கழி3கழி4

கழி4

பெயர்ச்சொல்

 • 1

  தடியான கம்பு.

  ‘பெரிய மூங்கில் கழிகளை நட்டு அதன் மேல் பரண் அமைத்திருந்தார்கள்’