தமிழ் கழுவு யின் அர்த்தம்

கழுவு

வினைச்சொல்கழுவ, கழுவி

 • 1

  (நீர், எண்ணெய் போன்றவற்றால்) சுத்தம்செய்தல்.

  ‘கைகால்களைக் கழுவிக்கொண்டு வா, சாப்பிடலாம்’
  ‘சாப்பிட்டு முடித்தவுடன் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்தாள்’
  ‘வாரம் இரு முறையாவது வீட்டைக் கழுவ வேண்டும்’
  ‘இயந்திரத்தை எண்ணெயால் கழுவிக்கொண்டிருந்தார்கள்’

 • 2

  (புகைப்பட அல்லது திரைப்படச் சுருளை) உருவம் தெரிவதற்காக வேதியியல் கலவையில் அலசுதல்.

  ‘புகைப்படத்தைக் கழுவிக் கொடுக்க இத்தனை நாளா?’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (துணி) துவைத்தல்.

  ‘கொஞ்சம் இரு, துணிகளைக் கழுவிவிட்டு வருகிறேன்’