தமிழ் கவ்வு யின் அர்த்தம்

கவ்வு

வினைச்சொல்கவ்வ, கவ்வி

 • 1

  (பற்களுக்கு அல்லது அலகுகளுக்கு இடையில்) அழுத்திப் பிடித்தல்.

  ‘முந்தானையை வாயில் கவ்விக்கொண்டு கொண்டை போட்டாள்’
  ‘நாய் எலும்பைக் கவ்விக்கொண்டு ஓடியது’
  ‘சுவர்மீது வந்து உட்கார்ந்த பூச்சிகளைப் பல்லி கவ்விக்கவ்வி விழுங்கிக்கொண்டிருந்தது’
  ‘மீன்கொத்திப் பறவை மீனைக் கவ்விக்கொண்டு பறந்தது’

 • 2

  (இருள்) சூழ்தல்/(மனத்தை பயம், பீதி, ஏக்கம் முதலியன) பற்றுதல்.

  ‘வானத்தில் இருள் கவ்வியிருந்தது’
  ‘திடீரென இனம்புரியாத திகில் அவளைக் கவ்வியது’

 • 3

  (ஒன்று மற்றொன்றோடு) இறுக்கமாகப் பொருந்துதல்.

  ‘உடலைக் கவ்விப் பிடிக்கும் உடை அணிவது கோடைக் காலத்திற்கு ஏற்றதல்ல’