தமிழ் காக்கி யின் அர்த்தம்

காக்கி

பெயர்ச்சொல்

  • 1

    மரத்தின் நிறத்தை ஒத்த ஒரு வகைப் பழுப்பு நிறம்.

    ‘பெட்டிக்கு உறை தைக்கக் காக்கி நிறத் துணி வேண்டும்’

  • 2

    (பொதுவாகக் காவல் துறையைச் சேர்ந்தவர்கள், தொழிலாளிகள் முதலியோருக்குச் சீருடை தைக்கப் பயன்படுத்தும்) சற்றுக் கனமாக இருக்கும் ஒரு வகைப் பழுப்பு நிறத் துணி.

    ‘காக்கி உடுப்பை வைத்து அவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று சொல்கிறாய்’