தமிழ் காத்திரம் யின் அர்த்தம்

காத்திரம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  அருகிவரும் வழக்கு (நீண்ட காலம் உழைக்கும் வகையில்) உறுதியானது அல்லது கனமானது.

  ‘ஒட்டியாணத்தை அழித்து இரண்டு ஜோடி காத்திரமான வளையல்கள் செய்தோம்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வலிமை; உறுதி.

  ‘அவனுடைய சட்டத்தரணி காத்திரமான வாதங்களை நீதியரசர்முன் வைத்தார்’
  ‘காத்திரமான கூட்டு அமைப்பதில் எதிர்க்கட்சிகள் முனைந்துள்ளன’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (இலக்கியப் படைப்பு, எழுத்தாளர் குறித்து வரும்போது) கருத்துச் செறிவு; தரத்தில் நிறைவு.

  ‘காத்திரமான நாவல்’
  ‘காத்திரமான எழுத்தாளர்’

 • 4

  இசைத்துறை
  குரலிலிருந்து அல்லது இசைக்கருவியிலிருந்து ஒலியை உருவாக்கும்போது தோன்றும் அழுத்தம்.

  ‘பாடகரின் காத்திரமான குரல் எல்லோரையும் வசீகரித்தது’