தமிழ் காந்து யின் அர்த்தம்

காந்து

வினைச்சொல்காந்த, காந்தி

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (அடுப்பில் வைக்கப்பட்ட உணவுப் பொருள் அதிகச் சூட்டால்) கருகுதல்.

  ‘பருப்பு காந்துகிற வாசனை அடிக்கிறது’

 • 2

  பேச்சு வழக்கு (சூரிய வெப்பத்தினால் உடம்பிலும், மருந்து முதலியவற்றால் புண்ணிலும்) எரிச்சல் ஏற்படுதல்.

  ‘மருந்து போட்டவுடன் புண் காந்துகிறது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு பேச்சு வழக்கு அரிக்கும் உணர்வு ஏற்படுதல்; அரித்தல்.

  ‘மயிர்க்குட்டி கையில் பட்டுக் கையெல்லாம் காந்துகிறது’

தமிழ் காந்து யின் அர்த்தம்

காந்து

வினைச்சொல்காந்த, காந்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (விலங்குகள் நாக்கு, பல் போன்றவற்றால்) சுரண்டுதல்.

  ‘வேலிக்குப் போட்ட கதியால் எல்லாவற்றையும் மாடு காந்திவிட்டது’