தமிழ் காப்புக்கட்டு யின் அர்த்தம்

காப்புக்கட்டு

வினைச்சொல்-கட்ட, -கட்டி

 • 1

  (திருவிழாவின் தொடக்கமாக நடத்தப்படும் சடங்கில்) கோவிலில் மரம் நட்டு அதில் மஞ்சள் நூல் கட்டுதல்.

 • 2

  (திருவிழாவின் சடங்குகளை முன்னின்று நடத்துபவர்கள் கையில்) மஞ்சளில் நனைத்து எடுத்த கயிற்றை விழா முடியும் நாள்வரை கட்டிக் கொள்ளுதல்.

 • 3

  (திருமணச் சடங்கின் ஒரு பகுதியாக) மணமகன் அல்லது மணமகளுக்கு மஞ்சளில் நனைத்த கயிற்றில் ஒரு துண்டு மஞ்சளை முடிந்து கையில் கட்டுதல்.

  ‘காப்புக்கட்டிய பிறகு மணமகன் வெளியே செல்லக் கூடாது என்பது சம்பிரதாயம்’