தமிழ் காயலான் கடை யின் அர்த்தம்

காயலான் கடை

பெயர்ச்சொல்

  • 1

    பழைய இரும்புச் சாமான்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை எடைக்கு வாங்கிக்கொண்டு பணம் தரும் கடை.

    ‘இந்த சைக்கிளைப் பேசாமல் காயலான் கடையில் போட்டுவிட்டுப் புது சைக்கிள் வாங்கிக்கொள்’
    ‘வீட்டில் கிடந்த அந்தப் பழைய இரும்பு நாற்காலியை இன்றுதான் காயலான் கடையில் போட்டேன்’