தமிழ் காலிசெய் யின் அர்த்தம்

காலிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (குடியிருக்கும் வீடு, அறை முதலியவற்றை விட்டு) வெளியேறுதல்; (இருக்கும் இடத்தை அல்லது இருக்கையைவிட்டு) நீங்கிப்போதல்.

  ‘வாடகை கொடுக்கவில்லை என்று வீட்டைக் காலிசெய்யச் சொன்னார்’
  ‘பேசிக்கொண்டே நிற்காதே. இடத்தைக் காலிசெய்!’

 • 2

  (பானை, குவளை முதலியவற்றில் உள்ள பொருள்களை) இல்லாமல் செய்தல்; இல்லாமல் ஆக்குதல்.

  ‘குண்டானில் இருந்த கஞ்சி முழுவதையும் காலிசெய்துவிட்டான்’

 • 3

  (ஒன்றை) தீர்த்தல்; செலவழித்தல்.

  ‘ஒரே நாளில் பணத்தைக் காலிசெய்துவிட்டான்’

 • 4

  பேச்சு வழக்கு (ஒருவரை) கொன்றுவிடுதல்.

  ‘சொத்துத் தகராறில் இரண்டு பேரைக் காலிசெய்துவிட்டான்’