தமிழ் காளை யின் அர்த்தம்

காளை

பெயர்ச்சொல்

 • 1

  ஆண் மாடு.

  ‘காளைகளை அடக்கும் போட்டி’

 • 2

  (வண்டியில் பூட்டி ஓட்டுவதற்கும் வயலில் உழுவதற்கும் பயன்படுத்தும் காயடிக்கப்பட்ட) மாடு.

  ‘காளைகள் இரண்டையும் வண்டியில் பூட்டினான்’

 • 3

  வாலிபம்/வாலிபன்.

  ‘காளைப் பருவம்’
  ‘கல்லூரிக் காளைகள்’

 • 4

  பெருகிவரும் வழக்கு பங்குச் சந்தையில் பங்குகளின் விலை உயரும் என்று எதிர்பார்த்துப் பங்குகளை முன்கூட்டியே வாங்குபவர்.