தமிழ் காவி யின் அர்த்தம்

காவி

பெயர்ச்சொல்

 • 1

  செங்கல் நிறம்; மங்கிய சிவப்பு அல்லது பழுப்பு நிறம்.

  ‘இந்திய தேசியக் கொடியில் காவி நிறம்’
  ‘வெற்றிலை போட்டுக் காவி ஏறிய பற்கள்’

 • 2

  (சாமியார்களும் பக்தர்களும் அணியும்) மங்கிய சிவந்த நிற ஆடை.

  ‘காவி அணிந்தவர்’

 • 3

  நீர்க்காவி.

  ‘துவைத்துத்துவைத்துக் காவி ஏறிய வேட்டி’

 • 4

  வீடுகளுக்கு வர்ணம் பூசுவதற்குப் பயன்படும் காவி நிறக் கனிமம் கலந்த களிமண்.

  ‘இரண்டு கிலோ காவி வாங்கிக்கொண்டு வா’

 • 5

  சிமிண்டுடன் கலந்து தரைக்குப் பூசப் பயன்படும் ஒரு வகைப் பொடி.

  ‘சிவப்புக் காவி’
  ‘மஞ்சள் காவி’