கிசுகிசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிசுகிசு1கிசுகிசு2

கிசுகிசு1

வினைச்சொல்கிசுகிசுக்க, கிசுகிசுத்து

 • 1

  (பிறர் கேட்காதவாறு ஒருவருடைய காதில்) மெதுவாக (ஒன்றை) சொல்லுதல்; ரகசியம் பேசுதல்.

  ‘அவருடைய காதில் ஏதோ கிசுகிசுத்ததும் அவர் முகம் மாறியது’
  ‘அவனிடம் ‘எனக்கும் பஞ்சு மிட்டாய் வேண்டும்’ என்று கிசுகிசுத்துவிட்டுச் சிரித்தாள்’

கிசுகிசு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கிசுகிசு1கிசுகிசு2

கிசுகிசு2

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
 • 1

  பெருகிவரும் வழக்கு பிரபலமானவர்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பத்திரிகைகள் முதலிய ஊடகங்களில் இடம்பெறும், உண்மை என்று உறுதியாகத் தெரியாத செய்திகள் அல்லது பொதுவாகப் பலர் பேசிக்கொள்வது.

  ‘இப்போதெல்லாம் நடிகர், நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களை வெளியிடுவதிலேயே பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன’