தமிழ் கிடையாது யின் அர்த்தம்

கிடையாது

வினைச்சொல்

 • 1

  (‘கிடையாது’ என்ற வடிவத்தில் மட்டும்) ‘உண்டு’, ‘உள்ளது’ என்னும் வடிவங்களுக்கும் ‘இரு’ என்னும் வினையின் முற்று வடிவங்களுக்கும் எதிர்மறையாக வருவது; இல்லை.

  ‘இந்தப் பூவுக்கு வாசனை கிடையாது’
  ‘பெண்ணுக்கு ஜாதகம் கிடையாது’
  ‘வீட்டில் தண்ணீர் கிடையாதா?’
  ‘அவர் சினிமாவுக்குப் போவது கிடையாது’
  ‘நான் வெற்றிலை போடுவது கிடையாது’