தமிழ் கிட்டிப்புள் யின் அர்த்தம்

கிட்டிப்புள்

பெயர்ச்சொல்

  • 1

    இரு புறமும் சற்றுக் கூர்மையாகச் செதுக்கப்பட்ட ஒரு மரத்துண்டை அதே அளவு பருமன் உள்ள மற்றொரு நீண்ட கோலால் தட்டி, அது துள்ளி மேலே எழும்போது அதை அடித்து, அது போகும் தூரத்தைக் கணக்கிடும் சிறுவர் விளையாட்டு.

  • 2

    மேற்குறிப்பிட்ட விளையாட்டில் பயன்படும், இரு புறமும் சற்றுக் கூர்மையாகச் செதுக்கப்பட்ட சிறிய மரத் துண்டு.