தமிழ் கிரகம் யின் அர்த்தம்

கிரகம்

பெயர்ச்சொல்

 • 1

  சூரியனைப் போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான (பூமி, வெள்ளி, சனி போன்ற) விண்வெளியில் இருக்கும் பொருள்; கோள்.

  ‘புளூட்டோ ஒரு கிரகம் அல்ல என்று அண்மையில் சர்வதேச வானியல் அறிஞர்கள் முடிவுசெய்திருக்கிறார்கள்’

 • 2

  சோதிடம்
  ஒருவருடைய ஜாதகத்தில் தான் இருக்கும் வீட்டைப் பொறுத்து நன்மைகளுக்கு அல்லது தீய பலன்களுக்குக் காரணமாகக் கருதப்படும் (சூரியன், சந்திரன், ராகு, கேது முதலிய) கோள்.

  ‘உன் ஜாதகத்தில் ஒரே வீட்டில் மூன்று கிரகங்கள் உள்ளன’