தமிழ் கிரகிப்பு யின் அர்த்தம்

கிரகிப்பு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு பொருள் வெப்பம், நீர் போன்றவற்றை) உள்ளிழுத்துக்கொள்ளுதல்.

    ‘செம்மண்ணுக்குக் கிரகிப்புத் தன்மை அதிகம்’

  • 2

    அருகிவரும் வழக்கு புரிந்துகொள்ளும் திறன்.

    ‘சாதாரண வாசகனின் கிரகிப்பிற்கு அப்பாற்பட்ட விஷயம் இது’