தமிழ் கிராக்கி யின் அர்த்தம்

கிராக்கி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (தேவை காரணமாக ஒரு பொருள் அல்லது நபர்) அதிகமாகத் தேவைப்படும் நிலை.

  ‘முகூர்த்த நாளாக இருப்பதால் வாழை இலைக்குப் பலத்த கிராக்கி ஏற்பட்டுள்ளது’
  ‘உள்ளூர் கிராக்கியே விலை ஏற்றத்திற்குக் காரணம்’
  ‘இந்தப் பேச்சாளருக்கு ஓர் ஆண்டுக்கு முன் இருந்த கிராக்கி இப்போது குறைந்துவிட்டது’

 • 2

  பேச்சு வழக்கு வாங்குபவர்; பயன்படுத்துபவர்; வாடிக்கை.

  ‘இன்று கடை திறந்ததிலிருந்து ஒரு கிராக்கியும் வரவில்லை’