தமிழ் கிறக்கம் யின் அர்த்தம்

கிறக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (மிகுந்த தூக்கம், போதை முதலியவற்றால் சரியாகச் சிந்திக்க முடியாதபடி ஏற்படும்) கண்கள் செருகிக்கொள்ளும் மயக்க நிலை.

    ‘தூக்கக் கிறக்கம்’
    உரு வழக்கு ‘அவளுடைய அழகு ஏற்படுத்திய கிறக்கம்’