வினைச்சொல்
- 1
படிக்க முடியாதபடி தெளிவு இல்லாமல் எழுதுதல்.
‘பாடம் எழுதச் சொன்னால் இப்படியா கிறுக்குவது?’ - 2
ஒருவர் எழுதுவதைக் கேலியாகக் குறிப்பிடப் பயன்படும் சொல்.
‘என் கணவர் எப்பொழுதும் எதையாவது கிறுக்கிக்கொண்டேயிருப்பார்’‘பொழுதுபோகாத நேரத்தில் ஏதாவது கிறுக்குவேன்’ - 3
(சிறு குழந்தைகள்) எழுதுவதான பாவனையில் கோடுகள் போடுதல்.
‘சுவர் முழுதும் குழந்தை கிறுக்கி வைத்திருந்தது’
பெயர்ச்சொல்
- 1
பைத்தியம்.
‘அவனுக்குக் கிறுக்கு பிடித்துவிட்டது’ - 2
பைத்தியம் பிடித்த நபர்.
- 3
மற்றவர்களிலிருந்து வேறுபட்ட விதத்தில் சிந்திப்பவர், நடந்துகொள்பவர்.
‘மற்றவர்கள் தங்களைக் ‘கிறுக்கு’ என்று சொல்வதுதான் சில கலைஞர்களுக்குப் பிடிக்கும்போல் இருக்கிறது’