தமிழ் கிலி யின் அர்த்தம்

கிலி

பெயர்ச்சொல்

  • 1

    பயப்படுகிறபடி ஏதாவது நடந்துவிடுமோ என்ற மனக் கலக்கம்; பீதி.

    ‘அமைச்சரின் கடும் எச்சரிக்கை வரி ஏய்ப்பு செய்பவர்களிடையே கிலியை ஏற்படுத்தியிருக்கிறது’
    ‘பேய் அடித்துவிடும் என்று கேட்டதும் அவனைக் கிலி பிடித்துக்கொண்டது’