தமிழ் கிளம்பு யின் அர்த்தம்

கிளம்பு

வினைச்சொல்கிளம்ப, கிளம்பி

 • 1

  (ஓர் இடத்திலிருந்து) புறப்படுதல்; வெளிப்படுதல்.

  ‘சாப்பிட்டுவிட்டு அவசரமாக வெளியே கிளம்பினான்’
  ‘பாம்பு இரவில்தான் இரை தேடக் கிளம்பும்’
  ‘நான் ஏறுவதற்கும் பஸ் கிளம்புவதற்கும் சரியாக இருந்தது’

 • 2

  (ஒன்று ஒரு இடத்திலிருந்து அல்லது ஒரு பரப்பிலிருந்து) வெளிப்படுதல்; மேலெழுதல்.

  ‘துப்பாக்கியிலிருந்து சரமாரியாகக் குண்டுகள் கிளம்பின’
  ‘எங்கிருந்து புகை கிளம்புகிறது?’
  ‘வெட்டுப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் குபுகுபுவென்று கிளம்பியது’
  ‘பந்து தரையில் பட்டு ஆளுயரத்திற்குக் கிளம்பியது’
  ‘கடலில் திடீரென்று பல அடி உயரத்திற்கு அலைகள் கிளம்பின’

 • 3

  (எதிர்ப்பு, வதந்தி, பேச்சு முதலியவை) எழுதல்.

  ‘அந்தப் புத்தகத்திற்குப் பலரிடமிருந்து கண்டனங்கள் கிளம்பின’
  ‘இப்படி ஒரு பிரச்சினை கிளம்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’