தமிழ் குட்டி யின் அர்த்தம்

குட்டி

பெயர்ச்சொல்

 • 1

  (நாய், புலி போன்ற) பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்குப் பிறக்கும் இளம் உயிர்.

  ‘ஆட்டுக் குட்டி’
  ‘யானைக் குட்டி’
  ‘நாய்க் குட்டி’
  ‘சிங்கக் குட்டி’
  ‘பாம்புக் குட்டி’

 • 2

  சிறுமி.

  ‘இந்தக் குட்டிக்குப் பத்து வயது இருக்குமா?’

 • 3

  தகுதியற்ற வழக்கு இளம் பெண்.

 • 4

  பேச்சு வழக்கு குழந்தைகளைப் பிரியத்துடன் அழைப்பதற்குத் தனியாகவோ பெயருடன் இணைத்தோ பயன்படுத்தப்படும் ஒரு சொல்.

  ‘‘ஏய் குட்டி, இங்கே வா’ என்று குழந்தையை அவர் கூப்பிட்டார்’
  ‘மீனுக் குட்டி’
  ‘அருண் குட்டி’

தமிழ் குட்டி யின் அர்த்தம்

குட்டி

பெயரடை

 • 1

  குறைந்த வயதுடைய; இளம்.

  ‘குட்டி இளவரசன்’
  ‘குட்டிப் பையன்’
  ‘குட்டி யானை’

 • 2

  (பொருளைக் குறிக்கையில்) (நீளம், அகலம், உயரம், பரப்பளவு ஆகியவற்றில்) சராசரியைவிடக் குறைந்த அளவுள்ள; சிறிய/(காலத்தைக் குறிக்கையில்) நேரம் குறைவான.

  ‘குட்டிக் கட்டில்’
  ‘குட்டி நகரம்’
  ‘குட்டித் தூக்கம்’
  ‘குட்டிக் கதை’

 • 3

  சிக்கல் இல்லாத சிறிய; மிகத் தீவிரமாக இல்லாத.

  ‘குட்டிக் கணக்கு’
  ‘குட்டிச் சண்டை’
  ‘குட்டிப் பிரச்சினை’