தமிழ் குடியிரு யின் அர்த்தம்

குடியிரு

வினைச்சொல்குடியிருக்க, குடியிருந்து

  • 1

    (ஒரு வீட்டில்) வாழ்க்கை நடத்துதல்; (ஓர் ஊரில் அல்லது ஊரின் பகுதியில்) வசித்தல்.

    ‘நாங்கள் இன்னமும் வாடகை வீட்டில்தான் குடியிருக்கிறோம்’
    ‘இங்கு வருவதற்கு முன்பு நாங்கள் மதுரையில் குடியிருந்தோம்’
    ‘நாங்கள் மயிலாப்பூரில் பத்து ஆண்டுகள் குடியிருந்தோம்’