தமிழ் குடியேற்றம் யின் அர்த்தம்

குடியேற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நாடு அதிகாரத்தின் மூலம் மற்றொரு நாட்டைக் கைப்பற்றித் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து தன்னுடைய மக்களை அங்கே வசிக்க வைக்கும் நடவடிக்கை/மேற்குறிப்பிட்ட நடவடிக்கையின் மூலம் கைப்பற்றிய நாடு.

  ‘ஐரோப்பிய நாடுகளின் குடியேற்றத்தினால் பல ஆசிய நாடுகள் தங்கள் வளங்களை இழந்தன’
  ‘ஆங்கிலேயக் குடியேற்றங்களில் ஒன்றாக இந்தியா இருந்தது’

 • 2

  ஒரு நாட்டில் குடியேறி நிரந்தரமாக வசிக்க மேற்கொள்ளும் செயல்பாடு/மேற்குறிப்பிட்ட முறையில் குடியேறிய மக்கள் பெருமளவில் வசிக்கும் பகுதி.

  ‘ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் இந்தியர்களின் குடியேற்றம் அதிகரித்திருக்கிறது’
  ‘இலங்கையின் துறைமுகப் பகுதிகளில் அராபியர் குடியேற்றங்கள் இருந்ததற்கான சான்றுகள் உண்டு’
  ‘காஸா பகுதியில் இஸ்ரேலியக் குடியேற்றங்கள்’

 • 3

  (பெரும்பாலும் பெயரடையாக) (ஒரு நாட்டில்) குடியேற விரும்பும் மக்களின் வருகை, அங்கீகாரம் போன்றவை குறித்த சட்டம் மற்றும் அதிகாரபூர்வ அரசுச் செயல்பாடுகள் தொடர்பானது.

  ‘கனடா நாட்டுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் குடியேற்ற அதிகாரிகளின் சோதனைகள் முடிந்து வெளியே வரப் பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது’
  ‘குடியேற்றத் துறை’
  ‘பிரிட்டிஷ் குடியேற்ற விதிகள் அண்மையில் திருத்தியமைக்கப்பட்டுள்ளன’