தமிழ் குடும்பம் யின் அர்த்தம்

குடும்பம்

பெயர்ச்சொல்

 • 1

  கணவனும் மனைவியும் தம் குழந்தையோடு (சில சமயம் தங்கள் பெற்றோரோடு அல்லது உடன்பிறந்தவரோடு) கூடி வாழும் சமூக ஏற்பாடு.

  ‘என் பெற்றோரையும் சேர்த்து என் குடும்பத்தில் எட்டுப் பேர்’

 • 2

  குடும்பத்தின் (பல வயதுகளில் இருக்கும்) எல்லா நபர்களையும் அல்லது எல்லா நபர்களுக்கும் உரியதைப் பொதுவாகக் குறிக்கும் சொல்.

  ‘ஆபாசக் காட்சிகள் இல்லாத இந்தத் திரைப்படத்தைக் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்’
  ‘குடும்பப் பத்திரிகை’
  ‘எங்கள் நிறுவனத்தில் எல்லோரும் ஒரே குடும்பமாகப் பழகுகிறோம்’

 • 3

  குடித்தனம்; வாழ்க்கை.

  ‘இந்த வருமானத்தில் எப்படிக் குடும்பம் நடத்துவது?’

 • 4

  (உயிரின வகைப்பாட்டில்) ஒத்த பேரினங்களை உள்ளடக்கிய, வரிசையைவிடச் சிறிய பிரிவு.

  ‘சிங்கம், புலி, சிறுத்தை எல்லாம் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை’
  ‘தென்னை மரமும் பனை மரமும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்’

 • 5

  ஒத்த பண்புகளை உடைய மொழிகளை உள்ளடக்கிய பிரிவு.

  ‘தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்றவை திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை ஆகும்’