குடுமி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடுமி1குடுமி2

குடுமி1

பெயர்ச்சொல்

 • 1

  (கொண்டைபோல் முடிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு) ஆண்கள் வளர்த்திருக்கும் நீண்ட முடி.

  ‘இத்தனை நாளும் குடுமி வைத்திருந்தவர் இன்று அதை மாற்றி கிராப் வைத்திருக்கிறாரே!’

 • 2

  (உரிக்கப்பட்ட தேங்காயின் கண் பகுதியில்) கூம்பு வடிவத்தில் இருக்கும் நார்க்கற்றை.

  ‘குடுமியைப் பிய்த்துவிட்டால் தேங்காய் சீக்கிரம் கெட்டுப்போகும்’

குடுமி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குடுமி1குடுமி2

குடுமி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (காதினுள் இருக்கும்) குறும்பி.

  ‘காதினுள் இருக்கும் குடுமியை எடுக்கும்போது கவனமாக இரு’