தமிழ் குத்துக்கட்டை யின் அர்த்தம்

குத்துக்கட்டை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வண்டி குடைசாய்ந்துவிடாமல் இருக்கப் பின்புறம் தொங்கவிடப்படும் உருட்டுக்கட்டை.

  ‘வண்டியைக் குத்துக்கட்டையில் விட்டுவிட்டுச் சாமான்களை ஏற்றினார்கள்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு முட்டுக்கட்டை.

  ‘தேருக்குக் குத்துக்கட்டை போடுவதில் அவன் அனுபவசாலி’
  ‘குத்துக்கட்டை போட்டதனால் தேர் பள்ளத்தில் இறங்காமல் நின்றது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு தடை; தடங்கல்.

  ‘எல்லாக் காரியத்துக்கும் அவன் குத்துக்கட்டையாக நிற்பான்’
  ‘நல்ல காரியங்களுக்கு இவர்கள் ஏன் குத்துக்கட்டை போடுகின்றார்களோ தெரியவில்லை’