தமிழ் குத்துளைவு யின் அர்த்தம்

குத்துளைவு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உடம்பு வலி.

    ‘நேற்று காணியைச் சுத்தப்படுத்தியதால் இன்று உடம்பு பூரா ஒரே குத்துளைவாக இருக்கிறது’
    ‘உடம்பு ஒரே குத்துளைவாக இருந்தபடியால் இன்று ஒரு வேலையும் செய்ய முடியவில்லை’
    ‘பிரயாணம் செய்ததும் போதும், குத்துளைவால் நான் படும் பாடும் போதும்’