குதிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குதிரை1குதிரை2

குதிரை1

பெயர்ச்சொல்

 • 1

  வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்குப் பழக்கப்படுத்தக்கூடியதுமான விலங்கு.

 • 2

  சதுரங்க ஆட்டத்தில் இரண்டு கட்டங்கள் நேராகவும் பிறகு ஒரு கட்டம் பக்கவாட்டிலும் நகரும் காய்.

 • 3

  தாண்டிக் குதிக்கும் தடகளப் போட்டியில் பயன்படும், குதிரையின் முதுகு வடிவத்தில் இருக்கும் சாதனம்.

 • 4

  சுவரின் உயரமான பகுதியை எட்டுவதற்கு உதவும், நான்கு கால்களை உடைய சாதனம்.

குதிரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

குதிரை1குதிரை2

குதிரை2

பெயர்ச்சொல்

 • 1

  (விரலால் அழுத்திக் குண்டை வெளியேற்ற) துப்பாக்கியின் கீழ்ப் பகுதியில் உள்ள விசை.

 • 2

  (முற்காலத்தில் வெடி மருந்து போட்டுக் கெட்டித்த துப்பாக்கியின் மேல்பகுதியில்) சேவல் கொண்டைபோல் இருக்கும் உறுப்பு.