தமிழ் குன்று யின் அர்த்தம்

குன்று

வினைச்சொல்குன்ற, குன்றி

 • 1

  (முன்பு இருந்த நிலைக்கும்) குறைந்த நிலைக்கு வருதல்; குறைதல்.

  ‘வயதாகிவிட்டாலும் வலிமை குன்றவில்லை’
  ‘எழுத வேண்டும் என்ற ஆர்வம் குன்றிவிட்டது’

 • 2

  (அவமானத்தால், வெட்கத்தால்) உடல் சிறுத்துவிட்டதைப் போல் உணர்தல்/(மனம்) கூசுதல்.

  ‘தன்னைப் பற்றிய அவதூறுகளைக் கேட்டு உடலும் உள்ளமும் குன்றிய நிலையில் அவர் இருந்தார்’

தமிழ் குன்று யின் அர்த்தம்

குன்று

பெயர்ச்சொல்

 • 1

  (தொடர்ச்சியாக இல்லாத, உயரம் குறைந்த) சிறு மலை.

  ‘குன்றின் உச்சியில் ஒரு முருகன் கோயில் இருக்கிறது’