தமிழ் குனியக்குனியக் குட்டு யின் அர்த்தம்

குனியக்குனியக் குட்டு

வினைச்சொல்குட்ட, குட்டி

  • 1

    (ஒருவர் பணிந்துபோவதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு) மேலும் அதிகாரம் செலுத்துதல்; தொடர்ந்து ஒடுக்குதல்.

    ‘அவன் சொல்வதை எல்லாம் நீ செய்வாய் என்று தெரிந்தால் குனியக்குனியக் குட்டுவான்’
    ‘நீ எதிர்த்துப் பேசாத வரையில் குனியக்குனியக் குட்டிக்கொண்டுதான் இருப்பார்கள்’