தமிழ் குமை யின் அர்த்தம்

குமை

வினைச்சொல்குமைய, குமைந்து

 • 1

  (புகை, நெருப்பு முதலியவை வெளியேற வழி இல்லாமல் ஒரே இடத்தில்) சுழன்றுவருதல்.

  ‘சமையல் அறை முழுக்கப் புகை குமைந்துகொண்டிருந்தது’

 • 2

  (பொறாமை, வெறுப்பு, கவலை போன்றவை) வெளிப்பட இயலாமல் மனத்திற்குள்ளாகவே சுழன்றுசுழன்று வருதல்; (மனம்) புழுங்குதல்.

  ‘பெற்றோரிடம்கூடக் கணவன் நடத்தையைப் பற்றிச் சொல்ல முடியாமல் குமைந்தாள்’
  ‘உனக்குள் குமையாதே! விஷயத்தைச் சொன்னால் உனக்குச் சற்று ஆறுதலாக இருக்கும்’