தமிழ் குறுக்கு யின் அர்த்தம்

குறுக்கு

வினைச்சொல்குறுக்க, குறுக்கி

 • 1

  (இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஏற்கனவே இருக்கும் தூரத்தை) குறைத்தல்.

  ‘இரண்டு அடி நீளம் இருந்த தடியை வெட்டி ஓர் அடியாகக் குறுக்கிவிட்டான்’

 • 2

  (உடலை) சுருக்குதல்.

  ‘உடலைக் குறுக்கிக்கொண்டுதான் வாசலில் நுழைய வேண்டியிருந்தது’

தமிழ் குறுக்கு யின் அர்த்தம்

குறுக்கு

பெயர்ச்சொல்-ஆக

 • 1

  அகலத்தைக் குறிக்கும் இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள (குறைந்த) தூரம் அல்லது இடைவெளி.

  ‘குறுக்குச் சந்து வழியாகச் சென்றால் சீக்கிரம் வீட்டை அடைந்துவிடலாம்’
  ‘மகாமண்டபத்தின் நடுவே குறுக்காக உள்ள சுவரில் நுழைவாயிலை ஒட்டி ஒரு சிற்பம் உள்ளது’
  ‘குரல்வளையின் நடுவே குறுக்காக இரு மடிப்புகள் போன்ற குரல் நாண்கள் உள்ளன’

தமிழ் குறுக்கு யின் அர்த்தம்

குறுக்கு

பெயர்ச்சொல்-ஆக

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு முதுகு.

  ‘குறுக்கு வலி’

 • 2

  வட்டார வழக்கு இடுப்பு.

  ‘காலையிலிருந்து ஓயாமல் வேலை செய்வதால் குறுக்கு வலிக்கிறது’