தமிழ் குறைபாடு யின் அர்த்தம்

குறைபாடு

பெயர்ச்சொல்

 • 1

  குறை³ (முதல் பொருளிலும் நான்காவது பொருளிலும்).

  see குறை (in the senses of 1 and 4).

 • 2

  (உடலில் சத்துகள்) போதிய அளவு இல்லாமை.

  ‘இரும்புச் சத்துக் குறைபாட்டைக் கீரை வகைகள் போக்கும்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (தெய்வக் காரியம் குறித்து வரும்போது) தவறு; குற்றம்.

  ‘கோவிலுக்கு நேர்த்திக்கடன் செய்யாத குறைபாட்டில்தான் ஊரில் நோய் வந்துள்ளது என்று பேசிக்கொண்டார்கள்’