தமிழ் குறைவு யின் அர்த்தம்

குறைவு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்று) குறைந்து காணப்படும் நிலை; கம்மி.

  ‘நான் பார்க்கும் வேலைக்கு இந்தச் சம்பளம் குறைவுதான்’
  ‘மரியாதைக் குறைவு’
  ‘கவனக் குறைவு’

 • 2

  போதிய அளவு இல்லாதிருத்தல்.

  ‘காப்பியில் சர்க்கரை குறைவாக இருக்கிறது’
  ‘கோடிக் கணக்கான பேர் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’

 • 3

  (ஒரு குறிப்பிட்ட நிலையை அளவாகக் கொண்டு கூறும்போது) கீழ் உள்ளது.

  ‘ரயிலில் பன்னிரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைக்கு அரைக் கட்டணம்’
  ‘அரை மணிக்கும் குறைவான நேரத்தில் முடித்துவிடக் கூடிய வேலை இது’