தமிழ் குலுக்கல் யின் அர்த்தம்

குலுக்கல்

பெயர்ச்சொல்

 • 1

  (மேடுபள்ளத்தில் ஏறி இறங்குவதால் அல்லது தடையால் வாகனங்களில் ஏற்படும்) ஆட்டம்; தூக்கிப்போடுதல்.

  ‘மாட்டு வண்டியில் உட்கார முடியாத அளவுக்குக் குலுக்கல்!’
  ‘பேருந்து ஒரு குலுக்கலுடன் நின்றது’

 • 2

  (பெண்களின்) கவர்ச்சியான உடல் அசைவு.

  ‘‘அவளுடைய குலுக்கலும் தளுக்கு நடையும் பார்க்க நன்றாகவா இருக்கிறது?’ என்று அவர் அங்கலாய்த்தார்’

தமிழ் குலுக்கல் யின் அர்த்தம்

குலுக்கல்

பெயர்ச்சொல்

 • 1

  (பரிசு, போட்டி, முறை போன்றவற்றைத் தீர்மானிப்பதற்காகப் பெயர், எண் போன்ற அடையாளங்களைக் கொண்ட சீட்டுகளைக் கைகளுக்குள் அல்லது பெட்டி போன்றவற்றில் போட்டு நன்றாகக் குலுக்கி) ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்தல்.

  ‘பந்தயத்திற்கு முன்னால் நடந்த குலுக்கலில் கந்தசாமியும் சீனிவாசனும் எதிர்த்து விளையாட வேண்டும் என்று முடிவாயிற்று’
  ‘இந்த மாதக் குலுக்கலில் சீட்டுத்தொகை என் நண்பனுக்குக் கிடைத்தது’