தமிழ் குலுக்கு யின் அர்த்தம்

குலுக்கு

வினைச்சொல்குலுக்க, குலுக்கி

 • 1

  (ஒன்றைக் கையில் பிடித்து) மேலும் கீழும் அல்லது பக்கவாட்டில் ஆட்டுதல்.

  ‘மருந்து குடிப்பதற்கு முன் சீசாவை நன்றாகக் குலுக்கு’
  ‘சாக்கு மூட்டையைச் சற்றுத் தூக்கிக் குலுக்கு; இன்னும் இரண்டு படி நெல் கொட்டலாம்’
  ‘உண்டியலைக் குலுக்கிக்கொண்டு வந்தான்’

 • 2

  (உடலை, தோளை) அசைத்தல்; ஆட்டுதல்.

  ‘அவள் உடலைக் குலுக்கிக்குலுக்கி நடந்தாள்’
  ‘‘தெரியாது’ என்று சொல்லிவிட்டு உதட்டைப் பிதுக்கித் தோளைக் குலுக்கினார்’